ஏற்கனவே படுமோசம். இப்போ 3 வீரர்கள் இதுவேறயா ? – இன்றைய போட்டியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

INDvsSL-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளதால் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு இந்த தொடர் முழுவதுமே ஒரு படு மோசமான நிலைமை இருந்து வருகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டதால் புதிய அணியை கொண்ட இலங்கை அணியானது ஒருநாள் தொடரில் களமிறங்கி இந்திய அணிக்கு எதிராக 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில் தற்போது டி20 தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அணிக்கு மேலும் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விரலில் காயம் அடைந்த பனுகா ராஜபக்சே இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் மேலும் இரண்டு வீரர்கள் இந்த டி20 போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி பதும் நிசன்கா இந்த டி20 போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது. அதே போன்று மற்றொரு வீரரான அசலங்கா தொடைப் பகுதியில் தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. முதல் டி20 போட்டியில் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

sl

இந்நிலையில் வீரர்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான காயம் காரணமாக தற்போது இலங்கை அணி சரிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே அவர்கள் வெற்றியை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் வீரர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக காயமடைந்து உள்ளதால் இந்த தொடரிலும் அவர்கள் நிலைமை படுமோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement