ஐ.பி.எல் தொடரை நாங்க நடத்துறோம். எங்க நாட்டுக்கு வாங்க பிளான் பக்காவா இருக்கு – விருப்பம் தெரிவித்த சிறிய நாடு

IPL
IPL Cup
- Advertisement -

இந்தியாவில் கடந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது சென்னை மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் முதற்கட்ட போட்டிகளை முடித்து விட்டு டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் இரண்டாவது கட்ட போட்டியை தொடர்ந்தது. இந்நிலையில் இந்த நேரத்தில்தான் ஐபிஎல் வளையத்திற்குள் கொரோனா புகுந்து தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தது. கடுமையான விதிமுறைகளை கடந்தும் பயோ பபுள் வளையத்திற்குள் கொரோனா வந்தது.

- Advertisement -

முதலில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதியாக அதனை தொடர்ந்து அமித் மிஸ்ரா, விருத்திமான் சஹா, மைக்கல் ஹஸி, பாலாஜி என அணி வீரர்களுக்கும், அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிக்க பிசிசிஐ இந்த தொடரை பாதியிலேயே ஒத்திவைத்தது. 29 போட்டிகள் முடிந்திருந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மீதமுள்ள 31 போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்த தொடரை நடத்தி முடித்துவிடலாம் என்றும் நினைத்திருக்கின்றனர். அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மை அப்போது எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Dubai

மேலும் பிசிசிஐ இந்த மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஆர்வம் காட்டுகிறது ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் போட்டிகளை நடத்த முடியாத நிலையில் அங்கு வெற்றிகரமாக பிசிசிஐ நடத்தி முடித்தது. இதன் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரையும் அங்கு நடத்த பிசிசிஐ முடிவு செய்யும் என்று தெரிகிறது. அதே வேளையில் தற்போது எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை இலங்கைக்கு வந்து நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

sl

மேலும் இலங்கையில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் அங்கு பாதுகாப்பாக நடத்தப்படும் என்றும் அதே வேளையில் அந்த மைதானங்களை உபயோகித்து செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்த முடியும் என்றும் இலங்கை நம்பிக்கை தெரிவித்து தங்களது விருப்பத்தை கூறியுள்ளனர். இருப்பினும் பிசிசிஐ அவர்களின் கோரிக்கையை ஏற்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement