INDvsSL : பி.சி.சி.ஐ யின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் – எதற்கு தெரியுமா ?

BCCI
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியானது விளையாட இருக்கிறது. மூத்த மற்றும் முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளதால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது பிசிசிஐ. சில நாட்களுக்கு முன் அறிவக்கப்பட்டிருக்கும் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் 5 நெட் பவுலர்களுடன் சேர்த்து மொத்தம் 25 வீரர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். இந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

indvssl

- Advertisement -

இந்த வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் உள்ள ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொடரை முன்னிட்டு பிசிசிஐ வைத்த ஒரு கோரிக்கையை தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நிராகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரானா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் அனைவரும் அதற்குப் பிறகு எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.

இதன்காரணமாக இலங்கை தொடர் ஆரம்பமாவதற்கு முன்னாள் இந்திய வீரர்களுக்கு, இலங்கை A அணியுடனான பயிற்சி போட்டிகளை ஏற்பாடு செய்து தரச் சொல்லி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது பிசிசிஐ. இலங்கையில் தற்போது கொரானா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால் பிசிசிஐயின் இந்த கோரிக்கையை நிராகரித்த்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்.

பயிற்சி போட்டிகள் ஏதும் இல்லாததால், இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள்ளகவே இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடும் இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியை மேற்கொள்வார்கள் என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ வட்டாரம். ஒரு டி20 போட்டி மற்றும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் கொண்ட இன்டரா ஸ்குவாட் பயிற்சி போட்டிகளை இலங்கை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாட உள்ளது. இந்த பயிற்சி போட்டிகள் இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

ind

இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணி, அங்கு சென்ற பின்னர் முதலில் ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி்முதல் ஒரு நாள் போட்டி ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகள் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறு. அடுத்து நடைபெற இருக்கும் மூன்று டி20 போட்டிகளும் 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட இருக்கின்றன.

Advertisement