நான் விளையாடுவதை என் குடும்பம் நேரில் வந்து பாக்கனும். அதுவே என் ஆசை – இளம்வீரர் விருப்பம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஆனது முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

deepak

- Advertisement -

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் தவித்தபோது சூர்யகுமார் யாதவ் களத்தில் வந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் அறிமுகமான அவர் தனது இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி 44 பந்துகளை சந்தித்த நிலையில் 6 பவுண்டரிகளை அடித்து 53 ரன்கள் அடித்தார். முக்கியமான நேரத்தில் அவுட்டாகி வெளியேறி இருந்தாலும் இவர் விளையாடிய ஷாட்டுகள் எல்லாம் சற்றும் பயமின்றி சிறப்பாக விளையாடி இருந்தார்.

இதன் காரணமாக இந்தியாவின் 360 டிகிரி வீரர் என்று ரசிகர்கள் இவரை தற்போது புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட், ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் என அசத்தி வந்த இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தனது தடத்தை பதித்து விளையாட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அவர் ஏற்கனவே அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sky

அதன்படி இந்திய அணிக்காக தான் தொடர்ந்து தயாராக விளையாட தயாராக இருப்பதாகவும், எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார். மேலும் அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்பார்த்து நான் இத்தனை நாளாக காத்திருந்தேன். என்னுடைய தந்தை என்னிடம் அடிக்கடி கூறும் விஷயம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். எனக்கான வாய்ப்பு கிடைத்ததும் வெற்றி கிடைக்கும் என்று அடிக்கடி சொல்லி வருவார்.

sky 1

அதன்படி தற்போது நான் எனது வாய்ப்புகளை படிப்படியாக சரியாக பயன்படுத்தி விளையாடி வருகிறேன். இனிவரும் காலத்திலும் இந்திய அணிக்காக எந்த இடத்திலும் விளையாட நான் தயார் அதேபோன்று என்னுடைய குடும்பத்தினர் நேரில் வந்து என்னுடைய ஆட்டத்தை பார்த்ததே இல்லை அது மட்டுமே எனக்கு சற்று வருத்தம். நிலைமை சரியான பின்னர் எனது குடும்பம் என்னுடைய ஆட்டத்தை நேரில் வந்து மைதானத்தில் கண்டு களிக்க வேண்டும் அது மட்டுமே என்னுடைய விருப்பம் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியகுமாரின் சிறப்பான ஆட்டம் காரணமாக நிச்சயம் அவர் உலக கோப்பை டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது..

Advertisement