
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து டி20 வடிவ கிரிக்கெட் போட்டியிலிருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வினை அறிவித்ததால் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் பிசிசிஐ-யின் மூலம் நியமிக்கப்பட்டிருந்தார்.
சீனியர் வீரர்களின் விலகல் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை குவித்து வரும் வேளையில் தனிப்பட்ட முறையில் சூரியகுமார் யாவும் பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது தலைமையின் கீழ் இந்திய அணி அடுத்தடுத்த டி20 தொடர்களை கைப்பற்றி வரும் வேளையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருப்பதன் மூலம் சூரியகுமார் யாதவ் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை டி20 கிரிக்கெட்டில் முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது 5 சிக்ஸர்களை அடிப்பதன் மூலமாக சூரியகுமார் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
இதுவரை இந்திய அணிக்காக 150 சிக்ஸர்களை டி20 போட்டிகளில் அதிவேகமாக அடித்த வீரராக ரோகித் சர்மா இருக்கிறார். ரோஹித் சர்மா 119 போட்டியில் 150 சிக்ஸர்களை அடித்திருந்தார். இந்நிலையில் 78 போட்டியிலே மட்டுமே விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 145 சிக்சர்களை அடித்துள்ள வேளையில் மேலும் இந்த தொடரில் 5 சிக்ஸர்களை அடித்தால் 100 போட்டிகளுக்கு உள்ளாகவே 150 டி20 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : ரோஹித், கில்லை தொடர்ந்து 8 ஆண்டுக்கு பிறகு முக்கிய முடிவை கையிலெடுத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ
அதேபோன்று ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மார்ட்டின் குப்தில் 105 போட்டிகளில் 150 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். அவரது இந்த சாதனையையும் எளிதாக உடைத்து சூரியகுமார் யாதவ் வரலாற்று சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.