நீ ரொம்ப ஒல்லியா இருக்க என்னோட ஹெவியான பேட்டை உங்களால் யூஸ் பண்ண முடியாது – சாஹலை கலாய்த்த இந்திய வீரர்

Chahal-1
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். தனது சிறப்பான சுழற்பந்து வீச்சின் மூலம் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் கிரிக்கெட்டை தவிர்த்து வீரர்களிடையே கலந்துரையாடி நகைச்சுவையில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

chahal

- Advertisement -

அதன்படி எப்பொழுதும் எங்கு போட்டி நடந்தாலும் போட்டி முடிந்தவுடன் எந்த அணியின் வீரர்களாக இருந்தாலும் தானாக முன் சென்று அவர்களுடன் உரையாடுவது, அவர்களுடன் சில வித்தியாசமான போட்டிகளை வைத்து விளையாடுவது என எப்போதும் மைதானத்தில் துறுதுறுவென்று இருப்பார் அவரும் கெயிலும் பலமுறை சட்டையை கழற்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததையும் நாம் கண்டிருக்கிறோம்.

அதே போன்று பல வீரர்களுடன் அவர் மிகவும் இலகுவாக பழகும் தன்மை உடையவர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய அணியில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள இளம் வீரருமான சூர்யகுமார் யாதவ் சாஹல் குறித்து சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். 30 வயதான சூர்யகுமார் யாதவ் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி பேட்டிங் செய்ய வந்த முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார்.

Chahal

அதுமட்டுமின்றி முதல் பந்திலேயே சிக்சர் மூலம் ரன் குவிப்பை துவங்கிய அவர் எப்படிப்பட்ட அதிரடி வீரர் என்பதனை அந்த போட்டியின் மூலம் வெளிப்படுத்தினார். இந்நிலையில் சாஹல் குறித்து அவர் பேசுகையில் : சாஹல் எப்பொழுதும் என்னிடம் வந்து உன்னுடைய பேட்டை கொடு அதை கொண்டு ஒருமுறை களமிறங்கி பார்க்கிறேன் என்று கேட்பார். அப்போதெல்லாம் நான் நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள். என்னோட ஹெவியான பேட்டை உங்களால் தூக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டேன்.

chahal 2

இருப்பினும் அவர் மீண்டும் என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அதனால் மற்றொரு முறை அவரை சந்தித்த போது எனது பேட்டை கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூரியகுமார் யாதவ் மட்டுமின்றி பலரிடம் சாஹல் இதேபோன்று பேட்டை கேட்டுள்ளார். குறிப்பாக தோனியின் பேட்டை இவர் ஒரு ஒருநாள் போட்டியில் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பொல்லார்ட் பயன்படுத்திய பேட்டையும் சாஹல் பயிற்சியின்போது எடுத்து விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement