- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுதான் எங்களோட ஸ்டைல்.. இனிமேல் இப்படித்தான் ஆடுவோம்.. வெற்றிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இனிமே இதுதான் இந்திய அணியின் ஸ்டைல் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : களத்தில் நிற்கும் போது என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் செய்து வருகிறோம். அதேபோன்று இந்திய அணியில் யாருக்கெல்லாம் பந்துவீச தெரிகிறதோ அவர்களை எல்லாம் நம்பி பந்தை தருகிறோம்.

- Advertisement -

அவர்களும் எங்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். அதையே நாங்கள் விரும்புகிறோம். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது அணியின் ஸ்டைலாக இருக்கும்.

இதையும் படிங்க : சிறந்த பவுலிங் என்றாலும் இன்னும் முன்னேறனும்.. விருதை அவங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.. தொடர்நாயகன் வருண் பேட்டி

எப்போதுமே டி20 போட்டிகளில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்கும் போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். இந்த தொடர் முழுவதுமே வருண் சக்கரவர்த்தி மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பந்துவீச்சு மட்டுமின்றி அவர் பீல்டிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறார். அதற்கு ஏற்ற பலனை அவர் தற்போது பெற்று வருகிறார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -