அணியில் தேர்வு செய்யாததால் வருத்தத்தில் கடற்கறைக்கு சென்று திரும்பிவந்தேன் – மனம்திறந்த இளம்வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 480 ரன்களை அடித்திருந்தார்.

SKY

- Advertisement -

அது மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த நிகழ்வு குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் : இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றபோது நான் தேர்வு செய்யப்படுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு அது ஏமாற்றமாக அமைந்தது.

ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து இருந்ததால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி இருந்தேன். ஆனால் அப்போது எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு விரக்தி தான் என்று கூறினார். மேலும் தொடர்ந்து கூறிய அவர் : இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற உள்ள தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சிதான் இருப்பினும் நான் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படாதபோது போது கடற்கரைக்கு தனியாக நடந்து சென்றேன்.

sky

என் மனைவிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பி விடுவேன். அப்போது என் முகத்தில் பெரிய புன்னகையை பார்க்கலாம் என்று கூறிவிட்டு நான் கடற்கரைக்கு சென்றேன். மேலும் அப்போது ஐபிஎல்லில் இன்னும் சில போட்டிகள் மீதம் இருந்தால் எப்படி விளையாடுவது எப்படி அணியை வெற்றி பெற வைப்பது என யோசிக்கவே அங்கு சென்று திரும்பினேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறைக்கு நான் திரும்பியபோது அனைவரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள்.

sky 2

மேலும் உனக்கான நேரம் நிச்சயம் வரும் இனி தொடர்ந்து பயிற்சி செய் என என்னை ஆதரவு கொடுத்து பயிற்சிக்கு அனுப்பினார்கள் என்று தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வாகியுள்ள அவர் இந்திய அணியுடன் அணியினருடன் எப்படி நேரத்தை செலவிட போகிறேன் என்று நினைத்து பார்க்க தொடங்கி விட்டேன் என நெகிழ்ச்சியுடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

Advertisement