இந்திய அணியில் இடம்பிடித்தது கனவுபோல் இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு பின் – இளம் வீரர் மகிழ்ச்சி

SKY
- Advertisement -

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்நிலையில் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.அதில் இலம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா முதல் முறையாக இந்தியாவுக்காக ஆட இருக்கின்றனர்.

INDvsENG

- Advertisement -

இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போல உணர்கிறேன் என்று சூர்யகுமார் யாதவ் நேற்று மனம் திறந்தார். சில வருடங்களாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணி என்னை தேர்வு செய்யாமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா தொடரின்போது அணியில் என்னை தேர்வு செய்வார்கள் என்று மிக பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த தொடரிலும் நான் தேர்வாகவில்லை. இது எனக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியது.

நீண்ட நாள் காத்திருந்த பின்னர் தற்பொழுது வாய்ப்பு கிடைத்தது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை நான் சரியாக பயன் படுத்த உள்ளேன் என்று மகிழ்ச்சி பொங்க சூர்யகுமார் யாதவ் இவ்வாறு பதில் அளித்தார். சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பிடித்து குறித்து பல்வேறு வீரர்கள் பாராட்டு தெரிவித்து வந்துள்ளனர்.

sky

இறுதியாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்து விட்டது குட் லக் சூர்யா என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துதுள்ளார்.

- Advertisement -

அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ள சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவின் காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது அவருக்கு எனது வாழ்த்துகள் மேலும் இஷான் கிஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் ’’ என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Tewatia

மேலும் அனைத்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement