நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். ரோஹித் கூறிய இந்த வார்த்தைகள் தான் என்னை தேற்றியது – சூர்யகுமார் யாதவ்

Sky
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டது. மேலும் இது தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலானோர் ஐபிஎல் ஆட்டத்தின் மூலம் அந்த செயல்பாட்டை வைத்து தான் தேர்வு செய்யப்பட்டதாக சொல்லியிருந்தது பிசிசிஐ. இதில் பல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

sky 2

- Advertisement -

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் இந்த தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது ரசிகர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இம்முறையும் இந்திய அணியில் இடம்பெறாமல் போனது சமூகவலைதளத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் இந்திய அணியில் தான் தேர்வாகாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தியும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது மிகவும் வேதனையும், வலியும் கொடுத்தது.

sky

நான் மனதளவில் மிகவும் உடைந்து போய் இருந்தேன். அப்போது நானும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஜிம்மில் இருந்தோம். அவர் என்னை பார்த்தார் உடனடியாக நான் என்னுடைய வலிகளை அவரிடம் வெளிப்படுத்தினேன். உடனே ரோகித் என்னை பார்த்து “நீ அணிக்காக(மும்பை) நல்ல பங்களிப்பை கொடுக்கிறாய்”, “உனது ஆட்டத்தில் மட்டும் கவனம் வைத்துக் கொள்” உனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் அதுவரை பொறுத்திரு எனக் கூறினார்.

sky 1

அவர் கூறிய அந்த வார்த்தைகள் எனக்குள் நம்பிக்கையை கொடுத்தது சூரியகுமார் என யாதவ் கூறியிருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியில் விளையாடி வரும் ஒரே காரணத்தினால் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறார் என்று ஒரு பேச்சும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement