இவரின் தலைமையின் கீழ் நான் விளையாட வேண்டும் என்பது என் கனவு – மனம்திறந்த சூரியகுமார் யாதவ்

SKY

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்த மார்ச் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐந்து டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியடப்பட்டது. அதில் சூர்யகுமார் யாதவின் பெயர் இஞம்பெற்றிருந்தது.இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஐ தொடரில் இந்தியாவுடன் இணைவதற்கு முன், சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் கீழ் விளையாடுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Sky

2010 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை எட்டாக்கனியாகவே பார்த்து வந்தார். ஐபிஎல் 2020க்குப் பிறகு இந்திய ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்திய அணியின் டி20 டீமில் இவர் சேர்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் , ஆச்சரியப்படும் விதமாக தேர்வாளர்களால் கைவிடப்பட்டார்.

இந்நிலையில் தான் கடந்த வந்த கஷ்த்தை யாதவ் தற்பொழுது வெளிபடுத்தியுள்ளார் ‘ஆஸ்திரேலியாக்கு எதிரான டி20 அணியில் நான் இடம் பெறாமல் போனதும் , நான் தனியாக கடற்கரைக்கு நடந்து சென்றேன்’ என்று வேதனை பொங்க கூறினார். சூரியகுமார் கடந்த சில ஆண்டுகளில் உள்ளூர் தொடர்களிலும் மற்றும் ஐ.பி.எல் தொடர்களிலும் அபாரமாக ஆடி வருகிறார். 2019/20 சையத் முஷ்டாக் அலி டிராபியில், 168 ஸ்ட்ரைக் விகிதத்தில் 392 ரன்கள் எடுத்துள்ளார்.

sky 2

விஜய் ஹசாரே டிராபி 2019-20 போட்டி தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் இருந்து சராசரியாக 113 ரன்கள் எடுத்தார். கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில், அவர் 512, 424, மற்றும் 480 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் இருந்து நடந்து கொண்டு வரும் விஜய் ஹசாரே டிராபியில் புதுச்சேரிக்கு எதிராக வெறும் 58 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து சூர்ய்குமார் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

- Advertisement -

சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரராக மாறுவதற்காக விராட் கோலியிடமிருந்து சில மதிப்புமிக்க உதவி குறிப்புகளை பெற எதிர்பார்த்துள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே கோலியின் கீழ் விளையாடுவது எனது நெடுநாள் கனவு என்று கூறினார், இறுதியாக இந்தியா கேப்டனுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “முதலாவதாக, நான் அகமதாபாத்தை அடையும் போது அணியுடன் நல்ல வகையில் நேரத்தை செலவழிக்க உள்ளேன்.

sky 1

விராட் கோலியின் கீழ் விளையாட வேண்டும் என கனவு கண்டேன், நான் ஒரு சிறந்த வீரராக முடியும் என்பதற்காக விராட் கோலியிடம் இருந்து என்னால் முடிந்தவரை விரைவாக ஆட்ட நுனுக்கங்களை கற்றுக் கொண்டு இன்னும் நல்ல வகையில் ஆடக்கூடிய வீரராக உறுமாறுவேன் ”என்று சூரியகுமார் யாதவ் பிசிசிஐக்கு தெரிவித்தார். “இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) நான் அவருக்கு எதிராக விளையாடியுள்ளேன், இந்தியாவுக்கு இவ்வளவு சாதித்த பிறகும் அவர் களத்தில் தனது ஆற்றலை பிரதிபலிக்கும் விதம் குறிப்பிடத்தக்கதாகும்.

நான் அவரை களத்தில் பார்த்திருக்கிறேன். வெற்றியை நோக்கி மட்டுமே சிந்திக்கும் அவரது அணுகுமுறை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, ”என்று அவர் மேலும் கூறினார். மேலும் பேசிய யாதவ் தனது சக ஐபிஎல் அணி வீரர் ஹார்டிக் பாண்ட்யாவிடம் கோலியைப் பற்றி கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தினார். நேரம் கிடைத்த போதெல்லாம் பாண்டியாவிடம் இருந்து கோலியின் பேட்டிங் பற்றி நான் அறிய முயற்சித்தேன் , கோலி பயிற்சியின் போது அதே வெறியும் எனர்ஜியும் மைதானத்திலும் சமமாக காட்டுவார் என்று பாண்டியா தெரிவித்தார்.முதலில் நான் இதையே கற்பேன் இதுவே என்னை அவரைப்போல ஒரு மிகச்சிறந்த வீரராக வடிவமைக்கும் என்றும் சூர்யகுமார் யாதவ் கூறினார்.