எங்க வீழ்ந்தியோ அங்கேயே எழுந்து நின்னுட்ட மச்சான்.. வருணை வாழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

வருண் சக்ரவர்த்தியை வாழ்த்திய சூரியகுமார் யாதவ் :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இதே துபாய் மைதானத்தில் 3 போட்டியில் விளையாடிய வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாத நிலையில் மீண்டும் தற்போது கம்பேக் கொடுத்து முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவும் வருண் சக்கரவர்த்தியின் இந்த கம்பேக் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். அந்தவகையில் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : மச்சான் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் நீ விழுந்தாய்.. ஆனால் தற்போது அதே இடத்தில் மீண்டும் வந்து அசத்தியிருக்கிறாய்,! எப்படி மச்சான் என்று கூறி அவரை வாழ்த்தி உள்ளார்.

இதையும் படிங்க : அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் – ஆடுகள பராமரிப்பாளர் பேட்டி

கடந்த போட்டியில் மிடில் ஓவர்களில் அசத்திய வருண் சக்ரவர்த்தியை அரையிறுதி போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும் என்றும் அவரது பந்துவீச்சை கணித்து விளையாட எந்த அணிக்குமே கடினமாக இருக்கும் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் வருண் சக்கரவர்த்திக்கு ஆதரவாக குரல் குடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement