சூரியகுமார் யாதவ் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாக வாய்ப்பே இல்லை – காரணம் இவர்தான்

Sky

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராட்கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Dhawan

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 62 ரன்களையும், க்ருனால் பாண்டியா 58 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக க்ருனால் பாண்டிய மற்றும் கிருஷ்ணா ஆகியோர் வாய்ப்பினை பெற்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

எனவே இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் முழுவதுமே அவர் விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் இப்போது வலுவாக உள்ளதாலும் நம்பர் 4 க்கான இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து பல தொடர்பாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Dhawan 1

ஏற்கனவே இந்திய அணி நான்காம் இடத்தில் ஏற்பட்ட சரிவினை சரிசெய்யும் விதமாக பல ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் இனியும் ஐயருக்கு தான் அந்த இடத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அணி நிர்வாகம் உறுதியாக இருப்பதால் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் விளையாடினார். இதனால் சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

iyer

மேலும் இந்த போட்டியில் மட்டுமல்லாது இனிவரும் போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் ஐயரை வெளியேற்றி ஆகவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் இந்த தொடர் முழுவதும் சூர்யகுமார் யாதவ் விளையாடமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.