இந்திய அணியை விமர்சித்த ரணதுங்காவுக்கு சரியான நோஸ் கட் கொடுத்த – சூரியகுமார் யாதவ்

Sky

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்றடைந்துள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதனையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

dravid

இந்நிலையில் இந்த இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட அணி என்கிற காரணத்தினால் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுன ரணதுங்கா அளித்த பேட்டியில் தற்போது இலங்கைக்கு வந்துள்ள இரண்டாம் தர இந்திய அணி இங்கு இங்கு வந்து விளையாடுவது எங்கள் அணியை அவமதிப்பது போன்ற ஒரு செயலாகும். ஏனெனில் முதன்மை அணியை தவிர்த்து இரண்டாம் கட்ட அணியை எங்களுடன் விளையாட வைத்து அவர்கள் வருமானம் பார்க்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் இந்திய பி அணியோடு தற்போது இலங்கை அணி விளையாடுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியை விமர்சித்து பேசியிருப்பது பலரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தனது பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ரணதுங்காவின் கருத்தை நாங்கள் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் அது குறித்து நாங்கள் பேசிக்கொள்ள கூட இல்லை. தற்போது நாங்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பயிற்சியும் திட்டமிட்டபடி சரியாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் இலங்கைக்கு வந்துள்ளதே ஜாலியாக இருக்க தான் என்று கூறலாம். இங்கு ஜாலியாக தொடரை விளையாடிவிட்டு இங்கிருந்து நிறைய நம்பிக்கையை நாங்கள் எடுத்துச்செல்ல விரும்புகிறோம்.

- Advertisement -

sky 1

நாங்கள் இரண்டாம் தர அணி என்ற கருத்து குறித்து பெரிதாக சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவ்வின் இந்தக் கருத்தின் மூலம் இந்திய அணி எளிதாக இலங்கை அணியை வீழ்த்தும் என்று மறைமுகமாக சூர்யகுமார் யாதவ் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement