MI vs KKR : கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலே சூரியகுமார் யாதவிற்கு இப்படி ஒரு சோதனையா? – நடந்தது என்ன?

Nitish-Rana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

KKR vs MI

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது ஆட்டத்தை முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக 3 ஆவது வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் சதம் அடித்து அசத்தினார்.

பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MI

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வயிற்று வலி காரணமாக பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் இம்பேக்ட் பிளேயராக விளையாடியதால் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக மும்பை அணிக்கு கேப்டனாக விளையாடினார்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி மும்பை அணியின் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே சூரியகுமார் யாதவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய மும்பை அணியானது குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் அவருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 12 லட்ச ரூபாய் அபராதத்தை அவர்கள் விதித்துள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : ஜீரோ இம்பேக்ட் தான், இது ஒன்னும் இந்திய அணி இல்ல – டெல்லியின் தொடர் தோல்விகளால் பாண்டிங்கை விமர்சித்த சேவாக்

அதுமட்டும் இன்றி போட்டியின் இருபதாவது ஓவரை வீச சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கூடுதலாக நேரத்தை எடுத்துக் கொண்டதால் கடைசி ஓவரின் போது உள்வட்டத்திற்கு வெளியே நான்கு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூடுதலாக ஒரு வீரர் உள் வட்டத்தில் நிற்கவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement