மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்த சூர்யகுமார் யாதவ் – கோபத்தில் கத்திய கோலி

Sky
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

sky 2

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் இந்தப் பெரிய ரன் குவிப்புக்கு காரணமாக சூர்யகுமார் யாதவ் திகழ்ந்தார். தனது அறிமுக போட்டியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் 31 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அமர்க்களப்படுத்தி 57 ரன்களை குவித்தார்.

அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட முதல் பந்தினை சிக்சருக்கு விரட்டிய சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியின் பவுலர்களை சற்றும் பதட்டம் இன்றி, பயமின்றி சிறப்பான வகையில் எதிர்கொண்டு விளையாடினார். ஆனால் இந்த போட்டியின் போது 14வது ஓவரை வீசிய சாம் கரனின் பந்தினை தான் வழக்கமாக ஆடும் ஃபேவரைட் ஷாட் ஒன்றை ஆட முயற்சித்தார். அந்த பந்து நேராக பீல்டர் டேவிட் மலானின் கைகளுக்கு சென்றது. அந்த பந்தை அவர் கேட்ச் பிடித்ததும் அவுட் என்று மைதானத்தில் இருக்கும் அம்பயர் தெரிவித்தார்.

malan

அதன் பின்னர் அதில் சந்தேகம் ஏற்பட்டு இந்த முடிவு மூன்றாவது அம்பயரின் கைகளுக்கு சென்றது. மூன்றாவது அம்பயரும் பல கோணங்களில் அந்த பந்தை பரிசோதித்து இறுதியில் அவுட் என்று தெரிவித்தார். ஆனால் திரையில் இந்த கேட்ச் காண்பிக்கப்படும் போது பீல்டர் பந்தை தரையில் வைத்தது தெளிவாக தென்பட்டது. மேலும் இது நாட் அவுட் என்று பார்க்கும் ரசிகர்களுக்கே தெரிந்தது. இருப்பினும் அம்பயர் அவுட் கொடுத்தது தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. சமூக வலைதளங்களில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், நிபுணர்களும் இந்த விக்கெட் நாட் அவுடு என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

malan-1

அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் அவுட் என்று அறிவிக்கப்பட்டபோது டக் அவுட்டில் இருந்த கேப்டன் கோலி இந்த விக்கெட் நாட் அவுட் என்று எழுந்து நின்று அம்பயரை நோக்கி கை காட்டி அது அவுட் இல்லை என்பது போல கோபத்தில் கத்தினார். அதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement