- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவலையே படாதீங்க.. உங்க ஆளு விளையாடுறாரு.. கேரளா ரசிகர்களை குஷி படுத்திய – சூரியகுமார் யாதவ்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

கேரளா ரசிகர்களை குஷி படுத்திய சூரியகுமார் யாதவ் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி ஜனவரி 31-ஆம் தேதியான இன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சற்று முன்னர் துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இப்படி தனது விருப்பத்தை சூரியகுமார் யாதவ் அறிவித்ததுமே அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறி அக்சர் பட்டேல், இஷான் கிஷன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள் என்பதை கேப்டன் அறிவித்தார்.

அதேவேளையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வீரரான சஞ்சு சாம்சன் இதுவரை அவரது சொந்த ஊரில் இந்திய அணிக்காக விளையாடாத வேளையில் அவர் இந்த போட்டியில் விளையாடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் அவருக்காக ரசிகர்கள் மைதானம் முழுவதுமாக நிரம்பி காணப்படுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : சரியான நேரத்தில் பவரை காட்டனும்.. டி20 உலககோப்பை தொடருக்கு முன்னர் – சவுரவ் கங்குலி அறிவுரை

இந்நிலையில் ரசிகர்களை பார்த்து பேசிய சூரியகுமார் யாதவ் : “திருவனந்தபுரம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்”, “சஞ்சீவ் சாம்சன் இன்று விளையாடுகிறார்” என்று கேரளா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சிரித்துக் கொண்டே பேசியதால் அவரது இந்த அறிவிப்புக்கு பிறகு மைதானம் முழுவதும் கரகோஷங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -