ஒருவழியா பிரச்சனை முடிஞ்சிச்சி. இங்கிலாந்தில் உள்ள இந்திய அணிக்கு ஒரு நற்செய்தி – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை மறுதினம் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியில் இருந்து துவங்க இருக்கிறது. இந்த மிகப்பெரிய தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள நிலையில் பயிற்சிப் போட்டியில் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியைச் சேர்ந்த கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தற்போது இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

INDvsENG

இதன் காரணமாக மாற்று வீரர்களாக இந்திய அணி சில வீரர்களை இங்கிலாந்திற்கு அனுப்பும்படி ஏற்கனவே இந்திய நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்படி தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை தொடர் முடிந்து நேரடியாக இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார்கள் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் டி20 தொடரின் போது க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருடன் சேர்த்து 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த 8 வீரர்களில் பிரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவும் சேர்த்து தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் திட்டமிட்டபடி இவர்களுக்கு இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைக்குமா ? என்று எதிர்பார்க்கப்பட்டது.

sky 1

இந்நிலையில் தற்போது இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் சான்று அளித்துள்ளனர்.

- Advertisement -

Shaw

இதன்காரணமாக அவர்கள் விரைவில் இங்கிலாந்து சென்று அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. இது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணிக்கு ஒரு நற்செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement