இங்கிலாந்தில் இருந்து துபாய் செல்லும் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் – என்ன தெரியுமா ?

cskvsmi
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐபிஎல் தொடரானது மே 4-ஆம் தேதியோடு வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாவது கட்டமாக நடத்தி முடிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்தது. அதன்படி தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெற இருக்கிறது.

IPL

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த விட்டன. ஆனால் இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் மட்டும் தற்போது துபாய் சென்று தங்களது அணியில் இணைய காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சி எடுத்து வரும் வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு பயோ பபுள் வளையத்திற்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இந்திய வீரர்கள் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகே அணியில் இணைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Bumrah-4

மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு ரிசல்ட் நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயோ பபுளில் இணைக்கபடுவார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. தற்போது 5வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மான்செஸ்டரில் இருந்து இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது அணிகளுடன் இணைய காத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ind vs eng

அப்படி அவர்கள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பார்கள் என்றும், துபாயில் ஆறுநாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயோ பபுள் வளையத்திற்குள் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement