இவர் மட்டும் பிட் ஆயிட்டா எதிரணியை துவம்சம் பண்ணிடுவாரு. ரொம்ப டேஞ்சர் பிளேயர் இவர்தான் – லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

LSK
- Advertisement -

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை காண ரசிகர்கள் மிகப் பெரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

INDvsSL

- Advertisement -

முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட மற்றொரு அணியை பிசிசிஐ இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் 6 புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படி புதிதாக விளையாடும் இந்திய அணி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாண்டியா மட்டும் தொடர்ச்சியாக பந்து வீசினால் அவர் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.

pandya

ஒருமுறை அவர் ஃபிட்னஸ் அடைந்ததும் பந்துவீச ஆரம்பித்து விட்டால் நிச்சயம் அவரால் இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பை கொடுக்க முடியும். நீண்ட காலமாக நமக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இருந்தது. அதனை போக்கி தற்போது ஹர்டிக் பண்டியா சிறப்பாக பந்து வீசுவது மட்டுமின்றி பேட்டிங் செய்யும் திறமையும் வெளிக்காட்டி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவரது பங்கு அதிகமாக இருக்கிறது எனவே அவர் மட்டும் பார்முக்கு வந்தால் எதிரணியை நிச்சயம் நொறுக்கி விடுவார்.

Pandya-3

இனிவரும் காலத்தில் பாண்டியா முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக விளங்குவார் என்று லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா அதன்பிறகு பந்து வீசாமல் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல பந்து வீச துவங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement