சேப்பாக்கம் மைதானமும் நாங்களும் காத்திருக்கிறோம் – நடிகர் சிவகார்த்திகேயன் தோனிக்கு வேண்டுகோள்

Sivakar

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 291 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியை காண ஏகப்பட்ட ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். இந்த போட்டியை நேரில் காண தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் நேரில் வந்திருந்தார். நேற்றைய போட்டி துவங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்குள் வந்து பேசினார் அதில் அவர் கூறியதாவது :

தல தோனி நீங்கள் மறுபடியும் வரவேண்டும். உங்களுடைய ஹெலிகாப்டர் சிக்ஸரை நாங்கள் பார்க்க எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்காக கண்டிப்பாக நீங்கள் இந்திய அணியில் ஐந்து வருடமாவது விளையாட வேண்டும் அது போதும் என கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.