தோத்துருந்தா சாதகம்ன்னு சொல்விங்களா? துபாயில் இந்தியா இதை செய்யாம சும்மா ஜெய்க்கல.. பேட்டிங் கோச் பதிலடி

Sttanshu Kotak
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் வெற்றிகளைப் பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்வதற்காக போட்டியிடுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறும் இந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் விளையாட முடியாது என்று இந்திய அணி ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டது. அதனால் இந்தியா அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது அப்போது யாருமே இது பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனல் சென்றதும் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

என்ன சாதகம்:

குறிப்பாக ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடி பிட்ச் பற்றி நன்றாக தெரிந்து கொண்டது இந்தியாவுக்கு பெரிய சாதகம் என்று நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன் ஆகியோர் விமர்சித்தனர். இந்நிலையில் ஒருவேளை தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு துபாயில் விளையாடியதே காரணம் என்று இதே விமர்சகர்கள் கூறியிருப்பார்களா? என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா நல்ல கிரிக்கெட்டை விளையாடாமல் வெற்றிகளைப் பெறவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துபாயில் எங்களுக்கு என்ன சாதகம் இருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் எந்த சாதகமும் இல்லை. இங்கே விளையாடுவது பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்தியா 4 போட்டிகளை வென்றதும் துபாயில் சாதகம் இருப்பதாக மக்கள் பேசுகின்றனர்”

- Advertisement -

வெற்றி சும்மா கிடைக்கல:

“இதற்கு எப்படி பதில் கொடுப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நாளின் இறுதியில் நீங்கள் வெற்றிப் பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். நன்றாக விளையாடவில்லையெனில் தோல்வியை சந்தித்ததற்காக புகார் செய்யக்கூடாது. நீங்கள் நன்றாக விளையாடினால் அதில் சாதகம் இருக்கிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை”

இதையும் படிங்க: விராட் கோலி கேப்டனா இருந்தாலும் தோனி தான் இந்திய வீரர்களுக்கு அந்த கட்டளையை விதித்தார் – ரவி சாஸ்திரி தகவல்

“துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடினாலும் நாங்கள் வெவ்வேறு பிட்ச்களில் விளையாடுகிறோம். இதில் சாதகம் எங்கே இருக்கிறது? என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் வெற்றிகளைப் பெற்று ஃபைனலுக்கு வந்த பின் சாதகம் இருப்பதாக மக்கள் நினைத்தால் அது கடினமான ஒன்று. நாங்கள் விதிமுறைகளைப் பின்பற்றிய விளையாடுகிறோம் எந்த சாதகமும் இல்லை. நீங்கள் வெற்றிப் பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement