- Advertisement -
இந்திய கிரிக்கெட்

155 ரன்ஸ்.. 31 சதங்கள்.. ரோஹித் ஃபார்மில் இல்லன்னு யார் சொன்னா? பேட்டிங் கோச் ஆதாரத்துடன் ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவருடைய சுமாரான பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த ரோகித் ரஞ்சிக் கோப்பையில் 10 வருடங்கள் கழித்து விளையாடியும் அரை சதம் கூட அடிக்கவில்லை.

இருப்பினும் 3 இரட்டை சதங்கள் விளாசிய தமக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 (7) ரன்களில் அவுட்டான ரோகித் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. அதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் அவர் ஃபார்முக்கு திரும்பாதது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங் கோச் ஆதரவு:

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலைப்படும் அளவுக்கு மோசமாக இல்லை என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிய போது ரோகித் மட்டும் அதிரடியாக விளையாடி 155 ரன்கள் குவித்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே விரைவில் ரோஹித் அசத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் ரோஹித் சர்மாவிடம் எதுவும் பிரச்சனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தத் தொடருக்கு முன்பாக கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் அவர் 56, 64, 35 ரன்களை கிட்டத்தட்ட 50 என்ற சராசரியில் குவித்துள்ளார்”

- Advertisement -

விரைவில் அசத்துவார்:

“இது போக 31 ஒருநாள் சதங்கள் அடித்த வீரரை பற்றி நாம் இங்கே பேசுகிறோம். ரோஹித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தும் போது யாருமே எப்போது அவர் சொதப்புவார்? என்று கேட்பதில்லை. அதே போல சில நேரங்களில் ஒருவர் தடுமாறும் போது அவர்களுடைய ஃபார்ம் பற்றி கவலைப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆம் ஆஸ்திரேலிய தொடரில் கடினமான நேரம் இருந்தது”

இதையும் படிங்க: 330 ரன்ஸ்.. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய நியூஸிலாந்தின் பிலிப்ஸ் மாஸ் சாதனை.. அப்ரிடி மோசமான சாதனை

“இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த மூன்று போட்டிகளில் ரோஹித் நன்றாகவே பேட்டிங் செய்துள்ளார். எனவே அவரைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார். மொத்தத்தில் ரோஹித் சர்மா விரைவில் பெரிய ரகங்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -