பீட்டர்சன் வேண்டாம்.. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகும் கோட்டக்.. யார் இவர்? என்ன தகுதி இருக்கு?

Sitanshu Kotak
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சுமாராக பேட்டிங் செய்தது முக்கிய காரணமானது. அதனால் இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன.

அதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் வெளிப்படையாக பதிவிட்டார். இந்நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சித்தான்சு கோட்டக் நியமிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் இந்திய அணியுடன் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

உள்ளூர் அனுபவம்:

இத்தனைக்கும் இந்திய அணிக்காக கோட்டக் ஒரு முறை கூட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இருப்பினும் உள்ளூரில் அவர் நிறைய விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக 1992 – 2013 வரை சௌராஷ்டிரா அணிக்காக அவர் 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8061 ரன்களை என்ற சராசரியில் குவித்துள்ளார்.

அதில் 15 சதங்கள் 55 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 89 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3 சதங்கள் 26 அரை சதங்கள் உட்பட 3083 ரன்களை 42.24 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக விளையாடாவிட்டாலும் உள்ளூரில் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் அளவுக்கு அவர் பேட்டிங்கில் வலுவான டெக்னிக் கொண்டவராக திகழ்ந்தார். மேலும் என்சிஏவில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையிலான குழுவில் அவரும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

புதிய பேட்டிங் கோச்:

2019 முதல் என்சிஏவில் இருக்கும் அவர் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போதைய இளம் இந்திய வீரர்கள் பற்றிய விவரங்களும் இணக்கமும் அவரிடமும் இருக்கிறது. அதனாலேயே இந்திய அணிக்கு அவரை அடுத்த பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இந்திய வீரர்களுக்கு 10 புதிய ஸ்ட்ரிக்ட் ரூக்ஸ்.. மீறினால் ஐபிஎல் விளையாட தடை.. பிசிசிஐ வைத்த ஆப்பு

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இவர் வந்த பின்பாவது இந்திய அணியில் பேட்டிங்கில் அடிக்கடி சீட்டுக்கட்டு போன்ற சரிவு நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தம்முடைய விக்கெட்டை பரிசளிப்பது நிற்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

Advertisement