2.5 மீட்டர் கண்டிஷன் போட்டாரு.. ஓவல் கியூரேட்டருடன் கம்பீர் சண்டையிடக் காரணம் என்ன? கோட்டக் பேட்டி

Sitanshu Kotak
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது போட்டி பரபரப்பாக நடைபெற்று டிராவில் முடிந்தது. அடுத்ததாக 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே ஓவல் மைதான பராமரிப்பாளருடன் கௌதம் கம்பீர் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் மற்றும் கௌதம் கம்பீர் ஓவல் மைதானத்தின் பிட்ச்சை பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கிடையே ஏதோ ஒரு கட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த கம்பீர் அவரிடம் காரசாரமாக பேசினார். அப்போது போர்ட்டிஸை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோட்டக் தொலைவாக அழைத்துச் சென்றார்.

- Advertisement -

2.5 மீட்டர் கண்டிசன்:

அதையும் தாண்டி கம்பீர் அவரிடம் கையை நீட்டி பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த தருணத்தில் நடந்ததைப் பற்றி கோட்டக் விளக்கியுள்ளது பின்வருமாறு. “ஐஸ் பெட்டியை வாங்கும் போது எங்களுடைய உதவி பயிற்சியாளர்களிடம் கியூரேட்டர் கத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்பீர் “எங்களுடைய வீரர்களிடம் அப்படி பேச முடியாது” என்று அவரிடம் சொன்னார். கியூரேட்டர் பேசிய விதம் கம்பீரை எரிச்சலடையச் செய்தது”

“ஓவல் மைதானத்தின் க்யூரேட்டர் சமாளிப்பதற்கு எளிதான நபர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் பிட்ச்சை பார்ப்பதற்காக அருகில் சென்றோம். அப்போது 2.5 மீட்டர் தொலைவிலிருந்தே பிட்ச்சை பார்க்க வேண்டுமென போர்டிஸ் சொன்னதாக ஒருவர் வந்து சொன்னார். அது ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் அது டெஸ்ட் பிட்ச். இத்தனைக்கும் நாங்கள் ஆணிகள் நிறைந்த காலணியை அணிந்து நடக்காமல், சாதாரண காலணிகளுடன் பார்க்கச் சென்றோம்”

- Advertisement -

கடுப்பான கம்பீர்:

“பிட்ச்சை ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு பார்க்கச் செல்வதில் தவறில்லை. அதனால் பிட்ச் பாதிப்படையவும் போவதில்லை. நாங்களும் ஏராளமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். பொதுவாகவே கியூரேட்டர் ஸ்கொயர் பகுதிகளை பாதுகாக்க கவனத்துடன் இருப்பார்கள் என்பது தெரியும். அதற்காக ரப்பர் காலணிகளைக் கூட போட்டுக்கொண்டு பார்க்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல”

இதையும் படிங்க: தற்போதைய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக கே.எல் ராகுல் இதை செய்றாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

“தங்களிடம் பேசுபவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் என்பதை க்யூரேட்டர் உணர வேண்டும். நீங்கள் களத்திற்கு சென்று பாருங்கள், எங்களுடைய பவுலர்கள் ஒருவர் கூட ஆணியுடன் கூடிய காலணியைப் பயன்படுத்தி ஓட மாட்டார்கள். அவ்வாறு பயிற்சிகளை எடுக்குமாறு கம்பீர் தான் சொன்னார். அப்படிப்பட்ட எங்களிடம் அவர் அவ்வாறு பேசுவது கொஞ்சம் திமிர்த்தனமாக இருக்கிறது. நாளின் இறுதியில் அது கிரிக்கெட் பிட்ச் மட்டுமே, தொடாமல் இருப்பதற்கு பழங்கால சிற்பம் கிடையாது. இதற்காக நாங்கள் எந்த புகாரும் செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement