இந்திய ஏ அணியில் நான் இடம்பிடித்து, இன்று தேசிய அணி வரை நான் விளையாட இவரே காரணம் – சிராஜ் பேட்டி

Siraj 1

அன்மைக்காலத்தில் சிராஜ் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறார்.கிடைத்த வாய்பப்பை பயன்படுத்தி எல்லாம் சரியாக பயன்படுத்தி தன்னை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சிராஜ் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரே அந்த தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் ஆவார்.

Siraj

இதை பார்த்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.ஆனால் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஆனால் தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கிற நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜான் பேர்ஸ்டோ மட்டும் ஜோ ரூட்டை காலி செய்துள்ளார்.

அந்த இரண்டு விக்கெட்டும் எல்பிடபள்யூ மூலமாக கைப்பற்றப்பட்ட விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த சிராஜ் ராகுல் டிராவிட்டை பற்றி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : ரஞ்சி கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை கண்டு தன்னை இந்தியா ஏ அணிக்கு ராகுல் டிராவிட் தான் தேர்ந்தெடுத்ததாக சிராஜ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

siraj 2

எப்போதும் எனக்கு அவர் ஊக்கம் அளிப்பார்.உன்னுடைய பவுலிங் லைன் மற்றும் பவுலிங் லென்த் சிறப்பாக உளளது சிராஜ் என்று கூறிக்கொண்டே இருப்பார். மேலும் நீ இதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் அது மட்டுமின்றி உனது பிட்னஸிலும் நீ கவனம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் சொல்லுவார்.அவர் எனக்கு எப்போதுமே கிரிக்கெட் பற்றிய அறிவுரைகளை கொடுத்து கொண்டே இருப்பார் என்றும் டிராவிட்டை சிராஜ் புகழ் பாடியுள்ளார்.

- Advertisement -

siraj

ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் தான் அறிமுகம் ஆகியிருந்தார். கோலியின் நம்பிக்கையை பெருமளவு இவர் பெற்றிருப்பதாலும் இவர் விரைவில் இந்திய அணியின் மூன்று விதமான அணியிலும் இடம்பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.