எனக்காக ரஹானே அம்பயர்களையே எதிர்த்து நின்றார் – இனவெறி சர்ச்சை சம்பவத்தை கூறிய சிராஜ்

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய சிட்னி டெஸ்ட் போட்டியின் போது மூன்றாம் நாள் ஆட்டத்தில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியான சீண்டி வம்பிழுத்தனர். அது மட்டுமின்றி அவர்களை குரங்கு, நாய் என்றும் கேலி படுத்தும் வகையில் குடித்துவிட்டு கடுஞ்சொற்களால் வசைபாடினர். தொடர்ந்து இந்த வார்த்தை தாக்குதல்களால் மனமுடைந்த சிராஜ் களத்தில் இருந்த நடுவரிடம் புகார் அளித்தார். இந்த விடயம் ஆஸ்திரேலிய தொடரின் போது பரபரப்பாக பேசப்பட்டது.

Siraj 2

- Advertisement -

மேலும் ஒரு நாளில் முடியாத இந்த விவகாரம் அடுத்த நாளும் தொடர மைதான நிர்வாகிகளும் மோசமாக செயல்பட்ட ரசிகர்களை மைதானத்திலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றினர். அப்போது அந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இனவெறி சீண்டலுக்கு உள்ளான போது கேப்டன் ரஹானே அம்பயர்களிடம் பேசிய சில வார்த்தைகளை முகமது சிராஜ் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நடுவரிடம் இனவெறி குறித்த சீண்டல் குறித்து முறையிட்ட பின் ரஹானே அம்பயர்களிடம் இந்த சீண்டல் குறித்து முறையிட்டார். மேலும் இந்திய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இந்திய அணி நிர்வாகிகள் சிலர் பவுண்டரிக்கு அருகில் பாதுகாப்பாக நின்றனர். மேலும் ரஹானே அம்பயரிடம் இந்த நிறவெறி சீண்டல் குறித்து மீண்டும் பற்றி புகார் கொடுத்தார்.

Siraj 2

அதற்கு மைதானத்தில் இருந்த அம்பயர்கள் இந்திய வீரர்களை பெவிலியனுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்தார். ஆனால் ரஹானே நாங்கள் ஏன் செல்லவேண்டும் ? அதெல்லாம் முடியாது, நாங்கள் விளையாடுவதற்காக தான் வந்தோம் என ரஹானே திட்டவட்டமாக அம்பயரை எதிர்த்துப் பேசினார். நாங்கள் விசாரிக்க சொன்னால் அவர்கள் எங்களை மைதானத்தில் இருந்து வெளியேறச் சொன்னார்கள். ஆனால் ரஹானே இதனை ஏற்கவில்லை எங்களால் வெளியேற ஏற முடியாது நாங்கள் என்ன தவறு செய்தோம் போட்டி தொடர வேண்டும் என்று கூறிவிட்டார்.

Siraj 1

அதன் பிறகே சிட்னி மைதானம் அதிகாரிகள் ரசிகர்களை வெளியேற்றினர். இந்த செயலால் களத்தில் எந்தவித பின்னடைவும் எங்களுக்கு ஏற்படவில்லை. உறுதியாக நின்றோம் இந்த தொடரை வென்றோம் என சிராஜ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னர் தனது தந்தையை இழந்த சிராஜ் அவரது இறப்பிற்கு கூட பங்கேற்காமல் ஆஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு இந்த வெற்றியுடன் அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement