எனது சிறப்பான பந்துவீச்சுக்கு இவர்கள் இருவரும் கொடுத்த ஊக்கமே காரணம் – மனம்திறந்த சிராஜ்

Siraj
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே முதல் போட்டியில் விளையாடி காயமடைந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

Siraj-1

- Advertisement -

298 ஆவது வீரராக இந்திய அணிக்கு அறிமுகமான அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் கையிலிருந்து அறிமுக தொப்பியை பெற்றார். இந்நிலையில் முதல் இன்னிங்சை விளையாடி முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் குவிக்க அந்த அணியின் முக்கிய வீரர்களான மார்னஸ் லாபுஷேன் மற்றும் கிரீன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் வீழ்த்திய இந்த இரண்டு விக்கெட்டுகளும் முக்கிய விக்கெட்டுகளை அமைந்தன. அதுமட்டுமின்றி தற்போது இரண்டாவது இன்னிங்சில் கூட டிராவிஸ் ஹெட் விக்கெட்டை அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் போட்டியில் விளையாடியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிராஜ் கூறியதாவது : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை நான் என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். கேப்டன் ரஹானே மற்றும் பும்ரா ஆகியோருடன் பேசிய பிறகு எனக்கு நம்பிக்கை பிறந்தது. இன்ஸ்விங் பந்து வீசும் திறமை எனக்குள் இயற்கையாகவே உள்ளது.

siraj 2

அதனால் எப்போதுமே நான் விக்கெட்டுக்கு அருகில் பந்தை ஸ்விங் செய்ய முயற்சிக்கிறேன். அவுட் ஸ்விங்கும் என்னால் நன்றாக வீச முடியும் என்று அவர் கூறினார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையை இழந்த சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு திரும்ப வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாமல் தந்தையின் ஆசைக்காக நான் எனது தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Siraj-3

இந்த போட்டியின்போது ஒவ்வொரு ஓவருக்கும் இடையே சிராஜுக்கு ரஹானே மற்றும் பும்ரா ஆகியோர் ஆலோசனை வழங்கியதாகவும் அதனால் தன்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது என்றும் சிராஜ் கூறியுள்ளார். மேலும் ஐதராபாத்தை சேர்ந்த சிராஜ் விஹாரியின் தலைமையின் கீழ் நிறைய முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளதால் விஹாரியும் அவ்வப்போது சிராஜுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement