திடீரென பந்துவீசுவதை நிறுத்திய இந்திய வீரர். 10 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்ட போட்டி – காரணம் இதுதான்

Siraj

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் விளையாட்டையும் தாண்டி தற்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிட்னி மைதானத்தில் செய்யும் நிறவெறி தொடர்பான சர்ச்சையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மூன்றாம் நாளில் ஆரம்பித்த இந்த நிறவெறி குறித்த கேலிப்பேச்சு தற்போது நான்காம் நாளிலும் தொடர்ந்து வருகிறது. இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த மைதானம் சிட்னி மைதானத்தில் இதுபோன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேவலமாக நடந்து கொள்வது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பல்வேறு வீரர்களும் அதாவது குறிப்பாக தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து விளையாடும் வீரர்களை அவர்களின் நிறத்தை வைத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மைதான நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த செயல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நான்காம் நாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடி கொண்டிருந்தபோது பந்துவீச தயாராகிக் கொண்டிருந்த சிராஜ் அப்போது திடீரென பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அம்பயரிடம் நேராக சென்று நிறவெறி குறித்துதான் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், ரசிகர்களின் கேள்வி அதிகரிப்பதாகவும் நடுவரிடம் தனது புகாரை முன்வைத்தார்.

Siraj 1

மேலும் தன்னை குறித்து பேசிய அந்த நபர்களையும் சுட்டிக்காட்டிய சிராஜ் மைதானத்தில் இருந்த நான்கு ரசிகர்களை நோக்கி அவர்கள் தான் இந்த செயலை செய்தனர் என்பது போன்றும் சைகை செய்தார். இதனால் போட்டி 10 நிமிடம் வரை தடைபட்டது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரஹானே அம்பயரிடம் இது குறித்து புகார் தெரிவிக்க உடனடியாக அவர்கள் மைதானத்தில் இந்த ஊழியர்களை அழைத்து அவர்களை வெளியேற்றும் படி கேட்டுக்கொண்டார்கள்.

- Advertisement -

Siraj 2

அதனைத் தொடர்ந்து கிண்டல் செய்த அந்த நால்வரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் போட்டி 10 நிமிடம் வரை தடைபட்டது. மேலும் கிரிக்கெட் உலகில் பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த செயல் ரொம்ப மோசமான செயல் என்றும் இதுபோன்ற ஜென்டில்மேன் கிரிக்கெட்டில் இந்த ரசிகர்கள் அந்த சூழலை கெடுக்கிறார்கள் என்றும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.