டி20 வேர்ல்டுகப்ல விளையாடறது என் கனவு. ஆனா நம்ம கையில என்ன இருக்கு – வருத்தத்தில் பேசிய இளம்வீரர்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை t20 உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்களும். ரிசர்வ் வீரர்களாக நான்கு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

IND

- Advertisement -

இந்த தொடருக்கு பின்னர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறக்க உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்று கூறப்படுவது. இந்நிலையில் இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத இந்திய அணியில் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தனது வருத்தத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த இங்கிலாந்து தொடர் சிறப்பாக அமைந்தது. விராட் கோலி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் பூர்த்தி செய்துள்ளேன். இந்த தொடரில் எனது பந்துவீச்சை நினைத்து நான் பெருமை அடைகிறேன். அதுமட்டுமின்றி அணி நிர்வாகிகளும், பயிற்சியாளரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாக என்னால் சிறப்பாக பந்துவீச முடிகிறது. டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு.

Siraj

ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது நம் கையில் கிடையாது. அது தேர்வாளர்களின் கையிலே உள்ளது. நான் இன்னும் டி20 கிரிக்கெட்டில் நிறைய அனுபவத்தை பெற வேண்டியது அவசியம். நன்றாக விளையாடினால் வாய்ப்புகள் தானாக வரும். இருப்பினும் தற்போது என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இனி வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் நிரந்தர வீரராகவும், என்னுடைய திறனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வேன் என்று சிராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Siraj 2

கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய சிராஜ் தற்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் முன்னணி பவுலர்களில் ஒருவராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement