கோலி – பென் ஸ்டோக்ஸ் மோதல் நடந்தது ஏன் ? – போட்டிக்கு பின் சிராஜ் கொடுத்த விளக்கம்

Stokes

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 205 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற மோதல் நேற்று இணையத்தில் வைரல் ஆனது.

stokes 1

அதன்படி 13வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரை முடித்த பிறகு பீல்டிங் செய்ய திரும்பினார். அதன்பிறகு அந்த ஓவரின் இடைவெளியின் போது ஸ்டோக்ஸ் மற்றும் கோலி ஆகியோர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். பின்னர் களத்தில் இருந்த அம்பயர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு நேற்றைய போட்டி சுமுகமாக நடந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்நிலையில் நேற்று போட்டியை முடித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் களத்தில் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் மோதல் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 13வது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது இந்த பிரச்சனை நடந்தது. எங்கள் அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தோம். அதனால் எங்களை சுழற்சி முறையில் கோலி பயன்படுத்த விரும்பினார்.

Stokes

நான் பென் ஸ்டோக்ஸ் எதிராக ஒரு பவுன்சரை வீசி விட்டு திரும்பும்போது அவர் என்னை சீண்டும் வகையில் பேசினார். உடனே நான் கேப்டன் என்ற முறையில் விராட் கோலியிடம் சென்று புகார் தெரிவித்தேன். அவரும் உடனே பென் ஸ்டோக்ஸ் இடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு செல்ல அங்கு மோதல் உண்டானது. உடனே இருவரையும் நடுவர்கள் சமாதானம் செய்தனர். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

siraj

மேலும் நேற்றைய போட்டியில் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச கடினமாக இருந்தது என்றே சிராஜ் கூறினார். இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.