நாடு திரும்பியதும் தனது தந்தையின் கல்லறைக்கு சென்று வணங்கிய சிராஜ் – வைரலாகும் புகைப்படம்

Siraj

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளராக தேர்வானார். அணியில் இடம் பெற்று இருந்தாலும் மூத்த வீரர்களின் இடம் காரணமாக முதல் போட்டியில் வாய்ப்பை பெறாத சிராஜ் இரண்டாவது போட்டியின் போது முகமது சமிக்கு பதிலாக இடம் பிடித்தார். அதிலிருந்து மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Siraj

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற முக்கிய காரணமாக சிராஜ் திகழ்ந்தார். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை முதல் முறையாக கைப்பற்றி அசத்தினார். இந்த தொடரில் மற்ற வீரர்களை போன்ற சாதாரணமான சூழ்நிலையில் விளையாடாமல் அசாதாரண சூழ்நிலையில் விளையாடினார்.

இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே தனது தந்தை காலமானதை நினைத்து வருத்தத்திற்கு இடையே அவர் பங்கேற்றார். தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட செல்லாமல் அவருடைய ஆசைக்காக இந்திய அணியில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சபதத்துடன் அவர் இந்த தொடரில் பங்கேற்ற அவர் இறந்த சோகத்தை மறைத்து இந்திய அணிக்காக வெற்றி தேடித்தந்த அவருடைய அர்ப்பணிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Siraj 1

இந்நிலையில் இது குறித்து பேசிய சிராஜ் : எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷமடைந்து இருப்பார். அவரது ஆசிர்வாதம் தான் தற்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்து 5 விக்கெட் வீழ்த்தியதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். எனது தந்தை இருந்தால் நிச்சயம் என்னை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.

- Advertisement -

siraj

மேலும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் இருந்து தற்போது நாடு திரும்பிய நிலையில் நேரடியாக ஐதராபாத்திற்கு சென்ற அவர் தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அவரது கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்ய புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.