இஷாந்த் சர்மாவிற்கு வந்த முடிவு. இளம்வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம் – இங்கி டெஸ்ட் தொடரில் ஆடப்போவது இவர்தானாம்

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து சீனியர் வீரரான இஷாந்த் ஷர்மா இந்த டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிட படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள இஷாந்த் ஷர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பெரிய அளவில் சோபிக்க வில்லை.

ishanth 1

- Advertisement -

இதன் காரணமாக இனிவரும் காலத்தில் இளம் வீரர்களை இந்திய அணியில் இடம் பெறச் செய்து விளையாட வைக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இஷாந்த் ஷர்மா வெளியேறும் பட்சத்தில் அவரது இடத்தில் திறமையான, ஒரு முழு தகுதி உடைய இளம் வீரரை இணைக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது.

அதன்படி இசாந்த் சர்மாவிற்கு மாற்று வீரராக இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இளம் வீரரான சிராஜிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது. ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடரில் இணைந்து விளையாடினாலும், இசாந்த் சர்மாவிற்கு பதிலாக நிச்சயம் சிராஜ் இடம்பெறுவார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

siraj 2

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கடந்த சில தொடர்களாகவே தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக நிச்சயம் அவர் இந்திய அணியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய தொடரின் போது சிறப்பாக விளையாடிய அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெயரையும் பெற்றார்.

Siraj-3

அது மட்டுமின்றி அவரது பந்து வீச்சில் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் இருப்பதன் காரணமாக இங்கிலாந்து மைதானத்தில் அவரால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் இனி வரும் காலங்களில் இந்திய அணியின் முன்னணி வீரராக மாறுவார் என்கிற காரணத்திற்காக சிராஜிக்கு இந்த இங்கிலாந்து தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாட அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement