வில்லியம்சனை வீழ்த்த என்கிட்ட பக்கா ஸ்கெட்ச் இருக்கு. இந்தமுறை நான் அவரை தூக்கிடுவேன் – இளம்வீரர் சவால்

IND

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐ.சி.சி உருவாக்கியுள்ள இந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது ? என்பதை காண ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

INDvsNZ

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் ? எந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்து கிரிக்கெட் நிபுணர்கள், விமர்சகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் ஒரு சில வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்த இறுதிப்போட்டி குறித்தும், கேன் வில்லியம்சன் குறித்தும் தான் வைத்திருக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : வில்லியம்சன் கிரிக்கெட் உலகில் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரை ஆட்டம் இழக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனாலும் அவரை வீழ்த்த என்னிடம் தெளிவான திட்டம் இருக்கிறது. சோர்வடையாமல் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீச நான் முயற்சிப்பேன். அப்படி அவரை ரன் அடிக்க விடாமல் நெருக்கடியை உண்டாக்கினால் அவர் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது நான் அவரை விழ்த்துவேன் என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.

siraj 2

மேலும் தொடர்ந்து கூறுகையில் : இங்கிலாந்து மைதானங்களில் பந்து ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் முன்வந்து விளையாடும்படி அதிக அளவிலான பந்துகளை நான் வீசுவேன். ஐபிஎல் தொடருக்கு பிறகு நாங்கள் எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியோ இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாட இருப்பது அவர்களுக்கு சாதகமான விஷயம் தான் இருப்பினும் நாங்கள் சரியான முறையான பயிற்சியுடன் நியூசிலாந்து அணியை பலமாக எதிர்கொள்வோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Siraj-3

ஏற்கனவே இந்த இறுதிப் போட்டி குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி கூறுகையில் : தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் சிறப்பாக உள்ளதாகவும் அணியில் உள்ள ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதாகவும், நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement