முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் மறைந்த தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திய சிராஜ் – இதை கவனிச்சீங்களா ?

Siraj-1
- Advertisement -

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அந்த தொடரில் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறாத சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று ஆஸ்திரேலியா பணித்திருந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்த அவரது தந்தை மாரடைப்பு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார். இந்த செய்தி அவருக்கு எட்ட மீளா துயரில் பெரும் வருத்தமுடன் இருந்தார் சிராஜ்.

Siraj

- Advertisement -

அதனால் பெரும் வருத்தத்தில் இருந்த சிராஜை இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தேற்றினர். இருப்பினும் அவருக்கு அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிசிசிஐ சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் தனது தந்தையின் விருப்பம் என்பதற்காக அவர் இறுதி சடங்கில் கூட பங்கேற்காமல் ஆஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். மேலும் தான் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர போவதாகும் அதையே தனது தந்தையின் மறைவிற்கு அஞ்சலி ஆக செலுத்துவதாகும் சிராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் கேப்டன் கோலி மற்றும் முதல் போட்டியில் காயமடைந்த முகமது சமி ஆகியோர் வெளியேறினர். இதன் காரணமாக முகமது ஷமிக்கு மாற்று பந்துவீச்சாளராக முகமத் சிராஜ் இந்திய அணியில் அறிமுகமானார். 298 ஆவது வீரராக இந்திய அணியில் அறிமுகமான சிராஜ் தனது அறிமுக தொப்பியை ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றார்.

Siraj

அதன்பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் சிறப்பாக பந்துவீசி மார்னஸ் லாபுஷேன் மற்றும் கிரீன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக 15 ஓவர்கள் வீசிய அவர் நான்கு மெய்டன்களுடன் 40 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த முன்னணி வீரரான மார்னஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது உடனடியாக வானை நோக்கி தனது இரண்டு கைகளையும் நீட்டி தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். அதனை கண்ட இந்திய வீரர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். அவருடன் இணைந்து இந்திய அணியின் துவக்க வீரரான மாயங்க் அகர்வாலும் வானை நோக்கி கையை நீட்டி மேலே பார்த்தார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.

siraj 2

தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான இன்று தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 81 ரன்களை எடுத்து 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 50 ரன்கள் பின்னிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement