இந்த வீரருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.! டிராவிட் கருத்து

dravid

இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக கிரிக்கெட் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் பணியாற்றி வருகிறார்.இவரின் தலைமையின் கீழ் இந்திய ஏ அணி சிறப்பாக செயல் பட்டு வருகிறது கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஏ அணி பல வெற்றிகளை குவித்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் டிராவிட் தற்போது இந்திய ஏ அணி வீரரை பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

siraj 2

தற்போது தென்னாபிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இரு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் முகம்மது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினர்

கடந்த சில மாதங்களாக சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சு திறனை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் இது போன்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு இந்திய தேசிய அணியில் இடம் பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது எனவும் டிராவிட் பெட்டியின் போது கூறியுள்ளார்.

siraj

முகம்மது சிராஜ் ஐ.பி.எல். போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 2018 ஆம் ஆண்டு 11 போட்டிகளில் 11 விக்கெட்களை அவர் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. டிராவிட் இவரது திறமையை பாராட்டியதை அடுத்து இவரை சீக்கிரமாக இந்திய தேசிய அணியில் எதிர் பார்க்கலாம்.