மீண்டும் தனது நல்ல குணத்தால் ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் முகமது சிராஜ் – வைரலாகும் வீடியோ

siraj

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் அது சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

Ashwin 1

அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி சதம் அடித்த போது அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் அஸ்வின் வெளிப்படுத்திய அதே அளவு உற்சாகத்தை சிராஜும் வெளிப்படுத்தினார். இதனை கண்ட ரசிகர்கள் அவரது நல்ல குணத்தை கண்டு பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச்சாளர் அடிபட்டவுடன் பேட்டை போட்டு விட்டு ஓடிச் சென்று அவருக்கு என்ன ஆனது என்று பார்த்து தனது நல்ல குணத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு தேசிய கீதத்தின் போது தனது தந்தையை நினைத்து அழுதது அவரது நல்ல குணத்தை வெளிக்காட்டியது. அதே போன்று மீண்டும் ஒரு முறை தற்போது அஸ்வின் சதம் அடித்தவுடன் அவர் தான் சதம் அடித்தது போன்று அவ்வளவு மகிழ்ச்சியை மனதார வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மட்டுமின்றி இந்த விடயம் தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே இதே போன்று ஒருமுறை விராத் கோலி சதம் அடிக்கும் போது எதிர்முனையில் இருந்த ரெய்னா அதனை கொண்டாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே போன்று தற்போது அஷ்வினின் சதத்தை எதிர்முனையில் இருந்த சிராஜ் கொண்டாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.