உண்மையா நீங்க கிரேட்.. இந்தியாவுக்காக தொடர்ந்து இதை செய்ங்க.. விராட் கோலியை வாழ்த்திய வெ.இ வீரர்

Wesley Hall 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிந்துள்ளது. அதில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை இந்தியா தோற்கடித்தது.

அதனால் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை லீக் சுற்றை அமெரிக்காவில் விளையாடிய இந்தியா இனிமேல் சூப்பர் 8 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாட உள்ளது.

- Advertisement -

ஜாம்பவானின் அன்பு பரிசு:
குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி பார்படாஸ் நகரில் உள்ளது. எனவே அங்குள்ள மைதானத்தில் இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பார்படாஸ் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணியினரை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் சர் வேஸ்லே ஹால் சந்தித்தார்.

கடந்த 1958இல் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 1969 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் அந்த 48 டெஸ்ட் போட்டிகளில் 192 விக்கெட்டுகளை எடுத்து அந்த காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி வீரராக வலம் வந்தார். அத்துடன் 170 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 546 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

- Advertisement -

1969இல் ஓய்வு பெற்ற அவர் அரசியலில் ஈடுபட்டு 1987இல் பார்படாஸ் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் செயல்பட்ட பெருமைக்குரியவர். மேலும் 2001 – 2003 வரை வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவர் தேர்வுக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் தம்முடைய வாழ்க்கையைப் பற்றிய அனுபவத்தை சுய சரிதையாக எழுதியுள்ள அவர் அதை இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பரிசளித்தார்.

இதையும் படிங்க: 1960லிருந்து இந்தியா எங்கயோ போய்டுச்சு.. கபில் தேவ் மாதிரி இப்போ அவரை பிடிக்கும்.. வேஸ்லே பேட்டி

அதைப் பெற்றுக் கொண்ட விராட் கோலி அவருடன் சிரித்து முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் கிரிக்கெட்டில் அவருடைய கேரியர் பற்றிய விவரங்களையும் விராட் கோலி கேட்டறிந்தார். அதே போல கேப்டன் ரோகித் சர்மாவும் அவருடைய அன்பு பரிசை பெற்றுக் கொண்டு ஆலோசனைகளைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement