இப்படி கூடவா அம்பயரை போடுவீங்க ? ரஞ்சி போட்டியில் அரிதான நிகழ்வு – பி.சி.சி.ஐ யை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்

Umpire
- Advertisement -

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சௌராஷ்ட்ரா மற்றும் மேற்கு வங்க அணிகள் மோதுகின்றன இந்த போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் பிடித்தா சவுராஸ்ரா அணி 300 ரன்களுக்கு மேல் அடித்து அபாரமாக ஆடி வருகிறது.

ranji

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் நடுவர்களில் ஒருவரான ஷம்சுதினுக்கு வீரர்கள் அடித்த த்ரோவில் அடிபட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவரால் தனது பணியை செய்ய முடியவில்லை. மூன்றாவது நடுவரான ரவி சுந்தரம் டிவி அம்பையராக இருக்கிறார்

எனவே பியூஸ் கக்கர் என்ற அனுபவமில்லாத நடுவர்களுக்கு அனுப்பப்பட்டார். வழக்கமாக ஒவ்வொரு ஓவர்களுக்கும் ஸ்கொயர் லெக் நடுவர் மற்றும் பந்துவீச்சு நடுவர் ஆகியோர் முனையை மாற்றி கொண்டு செயல்படுவார்கள். ஏனெனில் ஸ்கொயர் லெக் நடுவருக்கு பெரிதாக வேலை இருக்காது.

ஆனால் பந்துவீச்சு முனையில் இருக்கும் நடுவர் மிகவும் உன்னிப்பாக செயல்பட வேண்டும்.
இதற்காக வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஒரு ஓவருக்கு ஒரு முறை அம்பயர்களின் இடம் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் நேற்று அனுபவமில்லாத நடுவர்கள் அனுப்பப்பட்டதால் வேறுவழியின்றி அனந்தபத்மநாபன் நாள் முழுவதும் பந்துவீச்சு முனையில் நின்று தனது பணியை செய்தார்.

- Advertisement -

நாள் முழுவதும் ஒரு முனையில் நின்று, அதுவும் பந்துவீச்சு முனையில் நின்று அம்பையரிங் செய்வது மிகவும் கடினமான விஷயம். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் போர்டான பிசிசிஐ சிறந்த திட்டமிடுதல் இன்மையால் தற்போது நடுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்திய ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வினை உதாரணமாக வைத்து பி.சி.சி.ஐ நிர்வாகத்தை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement