- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஓய்வுக்கு பிறகு ரோஹித் சர்மா ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம்.. நக்கலாக பேசிய – சைமன் கேட்டிச்

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் இந்திய அணியின் வாய்ப்பும் தற்போது கலைந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்திய அணியின் தோல்விக்கும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு காமெடியனாக மாறலாம் :

ஏனெனில் இந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 31 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் அதிகபட்ச ஸ்கோராக 10 ரன்கள் மட்டுமே அவர் அடித்திந்ததார். அதன்காரணமாக அவரது பேட்டிங் பார்ம் இது ஏகப்பட்ட கேள்விகள் இருந்து வருகின்றன.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் கே.எல் ராகுலின் பேட்டிங் வரிசையை மாற்றியது, சுப்மன் கில்லை தேவையில்லாமல் பென்ஞ் செய்தது சுழற்பந்து வீச்சாளர்களை மாற்றியது என அவரது தவறான முடிவுகள் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு ஐந்தாவது போட்டியில் இருந்து வெளியேறிய அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேட்டிச் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா இன்னும் ரன்கள் எடுக்கும் பசியுடன் தான் விளையாடப் போகிறாரா? என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது என்பது எளிதாக இருக்காது. இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துவிட்டார்கள்.

இதையும் படிங்க : தெ.ஆ முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித்தின் லெகசியை உடைக்க காத்திருக்கும் தெம்பா பவுமா – விவரம் இதோ

எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் நிச்சயம் அவரது கரியருக்கு கடினமான தொடராக அமையலாம். ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும் போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்றும் சைமன் கேட்டிச் நக்கலான கருத்தினை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -