இப்போவும் சொல்றேன். சுப்மன் கில் – பிரிதிவி ஷா ஆகியோரில் பெஸ்ட் யார்? சைமன் டௌல் அளித்த பதில் இதோ

- Advertisement -

நியூசிலாந்தில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இளம் இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் கடைசி போட்டியில் வென்றால் தான் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ரன்கள் குவித்த சுப்மன் கில் 2வது போட்டியில் 45* (42) ரன்கள் விளாசி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Shubman Gill

- Advertisement -

கடந்த 2018இல் இந்தியா வென்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று 2019 ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரர் விருதையும் வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்து வெளியேறினார். அதன்பின் 2021இல் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் பேட்டிங் துறையில் அதிக ரன்களை குவித்து முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

கில்லி கில் தான்:

அதனால் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று தலா 3 – 0 என்ற கணக்கில் இந்தியா அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை சுவைக்க முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் நல்ல செயல்பாடுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அவர் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய பேட்ஸ்மேனாக அவதரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவுக்கு பின் இந்தியாவின் அடுத்த தொடக்க வீரராக உருவெடுப்பார் என்றும் கருதப்படுகிறார்.

shaw 1

அப்படி படிப்படியாக மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ள அவருடைய 2018 அண்டர்-19 உலகக்கோப்பையின் கேப்டனும் மற்றொரு இளம் அதிரடி வீரருமான பிரிதிவி ஷா அவரைப் போலவே 2018இல் அறிமுகமானாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் இந்திய அணியில் இடத்தை இழந்து தடுமாறி வருகிறார். இத்தனைக்கும் சுப்மன் கில்லை விட அதிரடி சரவெடியாக விளையாடும் தொடக்க வீரராக அறியப்படும் பிரிதிவி ஷா நல்ல திறமை வாய்ந்தவராக காட்சியளிக்கிறார். இருப்பினும் அதிரடியாக விளையாடும் திறமை கொண்ட பிரிதிவி ஷா’வை விட சீராக தொடர்ச்சியாக செயல்படும் திறமை கொண்ட சுப்மன் கில் வருங்காலத்தில் பெரிய அளவில் வருவார் என்று 2018லேயே கணித்ததாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த 2018இல் நியூசிலாந்து மண்ணில் நடந்த அண்டர்-19 உலக கோப்பை நடைபெற்ற போது வர்ணையாளராக செயல்பட்ட அவர் அப்போதே அவர்களை நேரடியாக பார்த்து இருவரில் யார் சிறந்தவர் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். தற்போது சொன்னது போலவே கில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் சைமன் டௌல் இது பற்றி தற்போதைய தொடரில் வர்ணனையாளராக செயல்படும் போது பேசியது பின்வருமாறு. “பிரிதிவி ஷா விட மிகப்பெரிய தூரத்தில் சுப்மன் கில் சிறந்த வீரர். இதை நான் அப்போது சொன்ன போது என்னை அனைவரும் வித்தியாசமாக பெரிதாக பார்த்தார்கள்” என்று கூறினார்.

Simon Doull

அதை உறுதி செய்யும் வகையில் அவருடன் 2018 உலக கோப்பையிலும் இப்போதும் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் பிரபல இந்திய கிரிக்கெட் வல்லுநர் ஹர்ஷா போக்லே பேசியது பின்வருமாறு. “2018இல் சைமனிடம் பிரிதிவி ஷா – சுப்மன் கில் ஆகியோரில் சிறந்தவர் யார் என்று மொபைல் போனில் மெசேஜ் அனுப்பி நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் கில் என பதிலளித்தது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs NZ : 2 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சனை ஏன் சேக்கல தெரியுமா? – காரணத்தை கூறிய கேப்டன் தவான்

முன்னதாக 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் 372 ரன்களை விளாசிய சுப்மன் கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement