அபாரமான டெஸ்ட் ப்ளேயர் ஆனால் சராசரிய பாருங்க, ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் தேர்வில் சைமன் டௌல் அதிரடி கருத்து

- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற பின்தங்கியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவு விட்டுள்ளது. இதனால் கடைசி கிரிக்கெட் போட்டியில் வென்றால் மட்டுமே இத்தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் ரிஷப் பண்ட்டுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் சாதனைகளை படைத்த ரிசப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் இது வரை சிறப்பாக செயல்படாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் அடித்த ஒரு சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்படவில்லை. அதுபோக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையிலும் நடைபெற்று வரும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் துணை கேப்டனாக வாய்ப்பு பெற்ற அவர் மீண்டும் மீண்டும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். மறுபுறம் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்த சஞ்சு சாம்சன் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று வந்தார்.

சராசரியை பாருங்க:

அந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானின் கேப்டனாக ஃபைனல் வரை அழைத்துச் சென்று பேட்டிங்கில் 400க்கும் மேற்பட்ட ரன்களை அதிரடியாக குவித்த சஞ்சு சாம்சன் அதன்பின் வெஸ்ட் இண்டிஸ், ஜிம்பாப்வே போன்ற சமீபத்திய தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டார். குறிப்பாக சமீபத்திய தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அவுட்டாகாத அவர் இத்தொடரின் முதல் போட்டியிலும் 36 ரன்கள் எடுத்து இந்தியா 306 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்.

Sanju Samson

ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக நியாயமின்றி நீக்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நிறை வாய்ப்புகள் கிடைப்பதே நியாயம் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார். இதில் அதிகப்படியாக விவாதிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒன்றுமில்லை என்று தெரிவிக்கும் அவர் இருவருடைய சராசரியை பாருங்கள் என்று புள்ளிவிவரத்துடன் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் புள்ளி விவரங்கள் ஓரளவு சுமாராக உள்ளது. 30 போட்டிகளுக்குள் விளையாடியுள்ள அவரது சராசரி 35, ஸ்ட்ரைக் ரேட் நன்றாக உள்ளது. ஆனால் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சஞ்சு சாம்சனின் சராசரி 60+ ஆகும். அவரும் சுமாரான விக்கெட் கீப்பர் கிடையாது”

- Advertisement -

“எனவே அவருக்கு தகுதியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் விவாதம் என்பது எனக்கு வித்தியாசமாக தோன்றுகிறது. குறிப்பாக ரிசப் பண்ட் மற்றும் அவருடைய வருங்காலம் பற்றி இங்கே நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அற்புதமான விக்கெட் கீப்பர் என்பதில் எந்த சந்தேகமில்லை. ஆனால் அவர் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் விக்கெட் கீப்பர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

Simon Doull

அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 855 ரன்களை 35.6 என்ற சுமாரான சராசரிலேயே எடுத்துள்ளார். மறுபுறம் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 330 ரன்களை 66 என்ற அற்புதமான சராசரியில் எடுத்து வருகிறார். மேலும் இந்த வருடம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை விட சஞ்சு சாம்சன் அதிரடியாகவும் அதிக ரன்களையும் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார். அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கும் சைமன் டௌல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement