பிரிதிவி ஷா, சுப்மன் கில் பற்றி நான் 2018லயே கணிச்சுது சரியாகிடுச்சு.. இதான் காரணம்.. சைமன் டௌல் பேட்டி

Simon Doull
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா நியூசிலாந்தில் நடைபெற்ற 2018 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக கேப்டனாக வென்றார். அதன் காரணமாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதமடித்தார். அப்போது சச்சின், லாரா, சேவாக் கலந்த கலவையை போல் அவர் விளையாடுவதாக ரவி சாஸ்திரி பாராட்டியது வைரலானது.

ஆனால் நாளடைவில் அந்த இடத்தைக் தக்க வைத்துக்கொள்ள தவறிய பிரிதிவி ஷா சுமாராக விளையாடியதால் தற்போது ரஞ்சிக் கோப்பை அணியிலிருந்து கூட கழற்றி விடப்பட்டுள்ளார். மறுபுறம் 2018 அண்டர் 19 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார்.

- Advertisement -

உண்மையான கணிப்பு:

அதன் காரணமாக 2019இல் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் தற்போது வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார். குறிப்பாக 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்த அவர் தற்போது மும்பையில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பிரிதிவியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வருவார் என்று 2018இல் தாம் கணித்தது நிஜமாகியுள்ளதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கூறியுள்ளார்.

இது பற்றி மும்பையில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பையன் தம்முடைய ஃபார்மையும் ஆட்டத்தையும் தொடரின் நடுவே சரி செய்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது. சுப்மன் கில்லை முதன் முதலில் நான் நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பையில் பார்த்தேன்”

- Advertisement -

அசத்தும் கில்:

“அப்போது பிரிதிவி ஷா பற்றி நிறைய பேச்சுக்கள் இருந்தது. ஆனால் அப்போது பிரிதிவி கேரியரை சுப்மன் கில் கேரியர் முந்தி செல்லும் என்று நான் தைரியமான கருத்தை சொன்னேன். ஏனெனில் பிரிதிவி ஷா பேட்டிங்கில் சில டெக்னிக்கல் தவறு இருந்ததை பார்த்தேன். ஆனால் அந்த வயதிலேயே சுப்மன் கில் டெக்னிக்கில் பெரிய தவறுகள் இல்லை”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் தவிர எல்லாரும் இப்படி அவுட்டாகலாமா? பேட்டிங் கோச் இதை சொல்லிக் கொடுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“அத்துடன் பேட்டி எடுத்த போது “நான் பெரிய போட்டிகளில் சதங்கள் அடித்து பெரிய வீரராக வரவேண்டும்” என்று சுப்மன் கில் தன்னம்பிக்கையுடன் சொன்னார். அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டையும் தாண்டி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த விரும்புகிறார். அதே போல ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் போன்றவர்கள் வருங்காலங்களில் இந்திய அணிக்காக பெரிய அளவில் சிறப்பாக விளையாடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement