
நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அந்தத் தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுவாகவே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பெரும்பாலான டெஸ்ட் தொடர்கள் அடிலெய்ட் நகரில் துவங்கி சிட்னியில் முடிவது வழக்கமாகும். ஆனால் இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்காகவே மிகவும் வெப்பமான பெர்த் நகரில் முதல் போட்டியை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அது ஜஸ்ப்ரித் பும்ராவை சோர்வடைய வைக்கும் திட்டம் என்று முன்னாள் நியூஸிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா அட்டவணையை சாதுரியமாக வடிவமைத்துள்ளது. அவர்களுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். எனவே அவர்கள் 3 கடினமான வேகமான ஆடுகளங்களை கொண்ட பெர்த் மற்றும் இளஞ்சிவப்பு நிற பந்து போட்டிக்கு அடிலெய்டை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதை செய்து அவர்கள் பும்ராவை சோர்வடைய வைக்க முயற்சிக்கிறார்கள்”
“குறிப்பாக பெர்த்தில் அதிகப்படியான வெப்பத்தில் அவரை ஆஸ்திரேலியா அதிகமாக பந்து வீச வைத்து சோர்வடைய வைக்க முயற்சிக்க உள்ளார்கள். பின்னர் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் இளஞ்சிவப்பு நிற பந்து போட்டியில் விளையாட உள்ளீர்கள். அதன் பின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரிஸ்பேன் நகரில் விளையாட உள்ளார்கள்”
“அந்த வகையில் ஆஸ்திரேலியா பும்ராவை முதல் இரண்டு மூன்று போட்டிகளில் அதிகப்படியான ஓவர்களை வீச வைத்து சோர்வடைய வைக்க முயற்சிக்க உள்ளார்கள். அதனால் அதற்கடுத்த போட்டிகளில் பும்ராவுக்கு இந்திய அணி ஓய்வு கொடுத்து மற்ற வீரரை தேர்ந்தெடுக்க கூடும். இந்த வகையில் ஆஸ்திரேலியா கொஞ்சம் சாதுரியமாக செயல்பட்டு அட்டவணையை உருவாக்கியுள்ளார்கள் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்.. என்ன பண்றாருன்னு இந்த சீரிஸ்ல பாக்கலாம் – அணில் கும்ப்ளே
“ஏனெனில் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் மிகவும் அரிதாகவே தொடரின் முதல் போட்டி நடைபெறும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்தியா வென்ற 2018 – 19, 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. ஆனால் இம்முறை பவுன்ஸ் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெர்த் நகரில் முதல் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.