இவரை பார்த்து பயந்தால் நிச்சயம் தோற்றுவிடுவீர்கள். விண்டிஸ் வீரர்களை எச்சரித்த – பயிற்சியாளர்

WI
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Ind-vs-Wi

- Advertisement -

இதற்காக இரு அணி வீரர்களும் ஹைதராபாத் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சிம்மன்ஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது விக்கட் போட்டிக்கு ரொம்ப முக்கியம் அவரை வீழ்த்துவது மிக கடினம் என்பதை நாம் அறிவோம்.

இருப்பினும் அவரை கண்டு பந்துவீச்சாளர்கள் பயப்படாது தைரியமாக பந்துவீச வேண்டும் ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினோம் அப்போது நாம் ரொம்ப மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை சிறப்பாகவே ஆடினோம் எனவே கோலியை கண்டு பயப்பட வேண்டும். இல்லையேல் அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்தி போட்டியின் வெற்றியை பறித்து விடுவார்.

kohli

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாம் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் ஏனெனில் இந்தியாவை அதன் மண்ணில் சாய்ப்பது சாதாரணமான விடயம் அல்ல என்று கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். எனவே அதே உத்வேகத்துடன் இந்திய அணியின் அவர்கள் நாளை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement