இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எனக்கு பிடிக்கும். இனியும் அதிரடி தொடரும் – வெ.இ வீரர் சபதம்

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 54 ரன்கள் குவித்தார்.

wi 1

அதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் சிம்மன்ஸ் கூறியதாவது : இந்தியாவுக்கு எதிராக எப்போதும் விரும்பி விளையாடுகிறேன். இந்த போட்டியில் சவாலை ஏற்றுக்கொண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறிது இடைவெளிக்குப் பிறகு ஆடினேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எனது பங்களிப்பை அளித்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பவர் பிளேயில் நான் எனது ஆட்டத்தை உணர்ந்து விளையாட வேண்டும்.

wi

மேலும் அவர்கள் அதிரடியாக ஆடுவதே எனது பணி அதனை நான் முதலிலிருந்தே செய்தேன் பவர்பிளே ஓவர்களில் பேட்டிங் செய்ய மைதானம் ஒத்துழைத்தால் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது மேலும் இந்த ஆட்டத்தை இனிவரும் ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர விரும்புகிறேன் என்று அவர் கூறினார்

Advertisement