ஷிகர் தவானின் அதிரடி 100.! அஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் இந்திய சதம்..!

- Advertisement -

கிரிக்கெட் அங்கீகாரத்தை பெற்ற இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியா வந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

dhawan
dhawan

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மோதிய இந்த போட்டி தற்போது பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில்நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 27 ஓவருக்கு 158 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் பறிகொடுக்காமல் விளையாடி வருகிறது.

- Advertisement -

dhawan

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி வரும் விஜய் மாற்று தவான் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் அதிரடியாக விளையாடி வரும் தவான் 91 பந்துகளில் 104 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். அதில் 19 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் தவான்.

Advertisement