புவனேஸ்வர் குமார் விலகல்..! அறிமுகம் ஆகும் இளம் வீரர்..! தோனி கையில் இதை பெற்றது பெருமையாக உள்ளது..! – யார் தெரியுமா..?

சமீபத்தில் நடைபெற்ற ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடந்த போட்டியில் தனது முதல் டி20 தொடரில் விளையாடிய இளம் வீரரான சித்தார்த் கவுளை போட்டிக்கு பின்னர், இந்திய வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் எடுத்த நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது.
kaul
இந்திய அணியின் வேக பந்து பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக ஐயர்லாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பஞ்சாபை சேர்ந்த இளம் வீரர் சித்தார்த் கவுர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு இந்திய யு19 உலக கோப்பை அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 ஒவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டிக்கு பிறகு அவரை பேட்டியெடுத்த புவனேஸ்வர் குமார். அப்போது இந்திய அணியில் பங்கேற்றுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன, போட்டியில் நீங்கள் என்ன திட்டத்தை வைத்துள்ளேர்கள் என்று பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
sidharth
அதற்கு பதில் கூறிய சித்தார்த் கவுர்”இந்திய அணிக்காக ஆடுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் கடந்த ஒரு வருடமாக எப்படி பந்து வீசினேனோ அந்த திட்டத்தை தான் தற்போதும் மனதில் வைத்துள்ளேன். இந்த போட்டியில் என்னுடைய முதல் பந்தை வீசும் போது மிகவும் பதட்டமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் பெற்ற அனுபவம் எனக்கு சிறப்பாக உதவியது. ” என்று கூறியுள்ளார்