இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை என்று கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார். முன்னதாக ரோஹித் சர்மாவுக்கு பின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவினார். இருப்பினும் அத்தொடரில் நடைபெற்ற 5 போட்டிகளில் ஒரு முறை கூட அவர் டாஸ் வீசுவதில் வெற்றி பெறவில்லை.
சுப்மன் கில்லின் டாஸ் பரிதாபம்:
அடுத்து நடைபெறும் வெஸ்ட் இண்டிஸ் தொடரின் முதல் போட்டியிலும் சுப்மன் கில் டாஸ் வெல்லவில்லை. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அவர் 6 தொடர்ச்சியான தோல்விக்குப் பின் ஒரு வழியாக டாஸ் வென்றார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக தோல்விகளுக்குப் பின் டாஸ் வென்ற கேப்டன் என்ற பரிதாப பெருமையை சுப்மன் கில் நியூஸிலாந்தின் டாம் லாதமுடன் பகிர்ந்து கொண்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டாம் லாதம், சுப்மன் கில் ஆகியோர் தங்களுடைய முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்து 7வது போட்டியில் வென்றனர். அந்தப் பட்டியலில் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பெவன் காங்டன் 7 போட்டிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். மொத்தத்தில் 6 தொடர்ச்சியான போட்டிகளுக்கு பின் டாஸ் சுப்மன் கில் தம்மை அறியாமலேயே புன்னகைத்தார்.
கிண்டலடித்த கம்பீர், பும்ரா, ஜடேஜா:
அவரை பார்த்து “ஒரு வழியாக டாஸ் வீசுவதில் சாதிச்சிட்டீங்க” கேப்டன் என்ற வகையில் கௌதம் கம்பீர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் கிண்டலாக சிரித்தனர். அத்துடன் டாஸ் நிகழ்வை முடித்து விட்டு அருகில் வந்த கில்லுக்கு கைக்கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா “வாழ்த்துக்கள் கேப்டன்” என்ற வகையில் ஜாலியாக கிண்டல் செய்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: பும்ரா விடயத்தில் பாத்து கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்.. அதான் நல்லது – அபிஷேக் நாயர் கருத்து
அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி 40* ரன்கள் எடுத்தார். அவருடன் சுதர்சன் 16* ரன்கள் எடுத்த போது வந்த முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 94 ரன்கள் எடுத்துள்ளது.



