உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட – இவருக்கே அதிக வாய்ப்பு

Gill

ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் 20 முக்கிய வீரர்கள் மற்றும் நான்கு கூடுதல் வீரர்கள் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

INDvsNZ

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் ? யார் ? விளையாடுவார்கள் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் எழுந்து வருகிறது. ஒரு இடத்தை பொருத்தவரை ரோகித் சர்மா கட்டாயம் துவக்க வீரராக விளையாடுவார். அதே சமயத்தில் மற்றொரு இடத்திற்காக விளையாடுவதில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் போட்டியில் உள்ளதால் இவர்கள் இருவரில் யார் துவக்க வீரராக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

மயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது துவக்க வீரராக சற்று தடுமாறினார். அதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் கில் களம் இறக்கப்பட்டார். இரண்டு போட்டிகளிலுமே அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிக்கு தேவையான முக்கியமான 91 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். அதேவேளையில் மயங்க் அகர்வால் அந்த தொடரில் சற்று தடுமாறினாலும் ஐபிஎல் தொடரில் இழந்த பார்மை மீட்டெடுத்தார் என்றே கூறலாம்.

Agarwal-1

ஆனால் சுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரில் சரிவர விளையாடவில்லை இதனால் இவர்கள் இருவரில் யார் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இறுதிப் போட்டியில் நிச்சயம் சுப்மன் கில்தான் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் முந்தைய ஆஸ்திரேலிய தொடரிலும் சரி அதன் பின்னர் இங்கிலாந்து அணி தொடரிலும் சரி கில் சிறப்பாக விளையாடிவுள்ளார்.

- Advertisement -

gill

இதனால் அணி நிர்வாகம் அவரை நீக்க விரும்பவில்லை மேலும் இங்கிலாந்து அணி தொடரையும் இந்திய அணி வெற்றி பெற்றதால் அந்த வெற்றி பெற்ற அணியை மாற்ற விரும்பாது என்கிற காரணத்தினால் நிச்சயம் துவக்க வீரராக கில் விளையாடுவார். ஒருவேளை அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வால் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement